search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டான்லி ஆஸ்பத்திரி"

    ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிய கைதி பல்சர்பாபுவை போலீசார் கைது செய்தனர்.

    பூந்தமல்லி:

    காசிமேடு பகுதியை சேர்ந்தவன் பாபு என்கிற பல்சர்பாபு. இவன் மீது ஏராளமான வழிப்பறி வழக்குகள் உள்ளன.

    ‘பல்சர்’ பைக்குகளில் மட்டுமே சென்று வழிப்பறியில் ஈடுபடுவது இவரது ஸ்டைல்.

    தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்ட பாபுவை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    கடந்த மாதம் அவனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவனை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    கடந்த மாதம் 14-ந்தேதி அதிகாலை பாபு, டீ குடிக்க வேண்டும் என்று பாதுகாப்புக்கு நின்ற போலீசாரிடம் தெரிவித்தான். அவனை போலீசார் தங்களது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஆஸ்பத்திரி முன்பு உள்ள டீக்கடைக்கு அழைத்து சென்றனர்.

    டீ குடித்துக் கொண்டு இருந்தபோது பாபு திடீரென போலீஸ்காரர்களை தள்ளி விட்டு அருகில் சாவியுடன் நிறுத்தி இருந்த அவர்களது மோட்டார் சைக்கிளை ஓட்டி தப்பி சென்று விட்டான்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். கடந்த ஒரு மாதமாக பாபு போலீஸ் பிடியில் சிக்காமல் இருந்தான்.

    இந்த நிலையில் பாபு, பெருங்களத்தூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    போலீசார் விரைந்து சென்று பாபுவை கைது செய்தனர். அவனிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Swineflu
    சென்னை:

    சென்னையில் டெங்கு, பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 165 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுபோல பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியை சேர்ந்த குமுதா (23), ராயபுரத்தை சேர்ந்த பூங்காவனம் (26) ஆகியோர் பன்றி காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய தனிமையான வார்டில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அவர்கள் இருவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று மருத்துவமனை டீன் பொன்னப்ப நமச்சிவாயம் தெரிவித்தார்.

    ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் காய்ச்சல் வார்டில் 82 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 10 பேருக்கு டெங்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை அளிக்கப்படுவதாக டீன் ஜெயந்தி தெரிவித்தார்.

    எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் பன்றி காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Swineflu
    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரி விடுதியில் லேப்-டாப் திருடிய வாலிபரை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர். #Robbery
    ராயபுரம்:

    சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை கல்லூரியில் 4-ஆம் ஆண்டு படித்து வருபவர்கள் விக்னேஷ், பாலாஜி. இவர்கள் கல்லூரி விடுதியில் தங்கி உள்ளனர்.

    கடந்த 18-ந் தேதி இவர்களது விடுதி அறையில் இருந்த லேப்டாப் மற்றும் செல்போன் திருடு போனது. இது குறித்து பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்த நிலையில் விக்னேஷ் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியில் அவரது லேப்டாப் பர்மா பஜார் அருகே உள்ளதாக தகவல் வந்தது. இது பற்றி அவர் வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.

    அப்போது ஒரு வாலிபர் லேப்டாப்பை விற்க முயன்றார். உடனே போலீசார் அவரை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர் அமைந்தகரை சேர்ந்த பிரகாஷ் என்பது தெரிய வந்தது.

    கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் வாட் பாயாக ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்லாமல் குற்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இவரிடமிருந்து மூன்று லேப்டாப் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். #Robbery


    சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் 9-ம் வகுப்பு மாணவனுக்கு நவீன கல்லீரல் ஆபரேசன் நடைபெற்றது.
    ராயபுரம்:

    தர்மபுரியை சேர்ந்தவர் முருகானந்தம். கூலித்தொழிலாளி. இவரது மகன் உதயகுமார் (15). 9-ம் வகுப்பு படித்து வருகிறான். 2 மாதங்களுக்கு முன்பு பள்ளியில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் உதயகுமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

    ஆபத்தான நிலையில் மாணவனை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனையில் உதயகுமாருக்கு கல்லீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. இண்டர்வென்‌ஷனல் ரேடியாலஜி பிரிவில் உதயகுமாருக்கு ஆபரேசன் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    கல்லீரல், குடல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சுகுமார் தலைமையிலான குழுவினர் மாணவனுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் ஆபரேசன் செய்தார். தொடையில் சிறிய ஓட்டை போட்டு ரத்த நாளங்களில் நுண்குழாய் செலுத்தி கல்லீரலில் ஏற்பட்ட ‘ரத்த’கசிவு சரி செய்யப்பட்டது.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி டீன் பொன்னம்பல நமச்சிவாயம் கூறியதாவது:-

    இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு சிறுவனுக்கு நவீன சிகிச்சை மூலம் கல்லீரலில் இருந்த ரத்த கசிவு அகற்றப்பட்டு உள்ளது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் உயர்தர அதிநவீன மருத்துவ கருவிகள் உள்ளன.

    தனியார் ஆஸ்பத்திரியைவிட சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையை தனியார் ஆஸ்பத்திரியில் பெற்றால் ரூ.4 லட்சம் வரை செலவாகும். முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது என்றார்.
    ×